மதுரை மலை பகுதிகளில் குடிநீருக்காக அல்லல்படும் வானரங்கள்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் மலை மற்றும் இன்னும் பிற மலை பகுதிகளில்   சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானரங்கள் உள்ளன.  வெயில் காலம் தொடக்கத்திலேயே சரியான நீர் நிலைகள் இல்லாததால் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நீரை தேடி வருகின்றன.

இதற்கு சரியான உணவு குடிநீர் கிடைப்பதில்லை.  வனத் துறையினர் உடனடியாக ஆங்காங்கே குடிநீர் தொட்டி வைத்து வானரங்களுக்கும்,  அங்கு வாழும் வனவிலங்குகளுக்கும் உணவு மற்றும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வன தல ஆர்வலர்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்