Home செய்திகள் ஏர்வாடியில் குடிநீர் தட்டுப்பாடு:ஊராட்சி அலுவலகம் முற்றுகை- காலிக்குடங்களுடன் வந்த பெண்கள்..

ஏர்வாடியில் குடிநீர் தட்டுப்பாடு:ஊராட்சி அலுவலகம் முற்றுகை- காலிக்குடங்களுடன் வந்த பெண்கள்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் ஏர்வாடியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. 

தாலுகா குழு உறுப்பினர் நம்புராஜன், முருகேசன், குமார், ராமநாதன், முருகராஜ், ராக்கம்மாள், சிக்கந்தர் பாஷா, மார்க்சிஸ்ட் கம்யூ.,  மாவட்டச் செயலாளர் காசிநாத துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமு, மயில்வாகனன் தாலுகா செயலர் அம்ஜத் கான், தாலுகா குழு உறுப்பினர்கள் பச்சம்மால், போஸ், சுப்ரமணியன், சக்தி குமார், ராமசாமி, ஜெயக்குமார் , ராமாயி உள்பட பலர் கலந்து கொண்டனர். இடியும் தருவாயில் உள்ள ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும், ஏர்வாடி தர்ஹா பகுதியில் சேதமான சாலையை செப்பனிட வேண்டும், சின்ன ஏர்வாடியில் பயனற்றுக்கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும்,  ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும், ‘100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்தி தினக்கூலியை தாமதம் இன்றி வழங்க வேண்டும்,  இருள் சூழ்ந்த இடங்களில் தெருவிளக்கு அமைக்க வேண்டும்,  உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். கீழக்கரை தாசில்தார் பழனி குமார், துணை தாசில்தார் பரமசிவம் கடலாடி பிடிஒ ஜெய ஆனந்த், கீழக்கரை டிஎஸ்பி (பொ) விஜயகுமார், ஏர்வாடி ஆய்வாளர் லட்சுமி/ சிக்கல் ஆய்வாளர் முருகதாஸ், கீழக்கரை ஆய்வாளர் வேல்முருகன், ஏர்வாடி விஏஓ ஆகியோர் முற்றுகையிட முயன்றவர்களிடம் சமரசம் பேசினர்.  டேங்கர் லாரி மூலம் ஏர்வாடி ஊராட்சி பகுதியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கடலாடி ஒன்றிய அதிகாரிகள் உறுதியளித்ததால் முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!