Home செய்திகள் ஒளியியலைப் பயன்படுத்திச் சூரிய ஆய்வில் ஈடுபட்ட சூரிய வானியலாளர், ஜான் வெய்ன்ரைட் எவான்சு பிறந்த தினம் இன்று (மே 14, 1909).

ஒளியியலைப் பயன்படுத்திச் சூரிய ஆய்வில் ஈடுபட்ட சூரிய வானியலாளர், ஜான் வெய்ன்ரைட் எவான்சு பிறந்த தினம் இன்று (மே 14, 1909).

by mohan

ஜான் வெய்ன்ரைட் எவான்சு (John Wainwright Evans) மே 14, 1909ல் நியூயார்க், அமெரிக்காவில் பிறந்தார். 1932ல் சுவார்த்மோர் கல்லூரியில் கணிதவியலில் பட்டம் பெற்றார். எவான்சு பென்சில்வேனியா பல்கலைக்கழக வானியல் துறையில் சிலகாலம் பணியாற்றிய பிறகு, 1936ல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் முதுவல் பட்டம் பெற்றார். 1938ல் இவருக்கு ஆர்வார்டு பல்கலைக்கழகம் வானியலில் முனைவர் பட்டம் அளித்த்து. எவான்சு பின்னர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்திலும், மில்சு கல்லூரியிலும் ஓராண்டு காலம் பணிபுரிந்தார். கலிபோர்னியாவில் உள்ல ஓக்லாந்தில் கல்விகற்பிக்கும்போது சபோத் வான்காணகத்திலும் பணி செய்தார். அப்போது உதவிப் பேராசிரியராகவும் அமர்த்தப்பட்டார். அங்கு இவர் தனியாக, ஆனால் சற்ரே காலம்தாழ்த்தி இலியோத் வடிப்பியைக் கண்டறிந்தார். எவான்சு 1942ல் உரோசெசுட்டர் பல்கலைக்கழகத்தின் ஒளியியல் நிறுவனத்துக்கு இடம்பெயர்ந்தார் அங்கு இவர் படைத் துறைக்கான பணியில் ஈடுபட்டு ஒளியியல் அமைப்புகளை உருவாக்கினார்.

எவான்சு 1946ல் இருந்து 1952 வரை உயர்குத்துயர வான்காணக உதவிக் கண்காணிப்பாளராக கொலராடோவில் பவுள்டரிலும் கிளைமேக்சிலும் இருந்துள்ளார். இவர் 1952ல் ஐக்கிய அமெரிக்க வான்படையின் நியூமெக்சிகோ, சாக்கிரமெந்தோ பீக்கில் உள்ள புதிய மேல்காற்றுமண்டல வானாராய்ச்சி காணகத்தின் முதல் இயக்குநராக ஆனார். இவ்வமைப்பு 1976ல் தேசிய அறிவியல் அறக்கட்டளை கட்டுபாட்டுக்கு வந்த்தும், தேசியச் சூரிய வான்காணகமாகப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த வான்காணக இயக்குநராக, வான்காணகம் இருந்த இட்த்துக்கும் அஞ்சலகத்துக்கும் சமுதாய மையத்துக்கும் சூரியக் கரும்புள்ளி, நியூமெக்சிகோ என்ற பெயரை இவர் தேர்வு செய்தார்.

தேசிய சூரிய காணகத்தில் எவான்சு பணிபுரியும்போது, நியூகோம்ப் கிளீவ்லாந்து பரிசு, அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகம், ஆய்வுறுப்பினர், அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகம் (1964), பாதுகாப்புத் துறையின் பொதுசேவைத் தகைமை விருது (1965), தகைமை அறிவியல் முதுமுனைவர் பட்டம், நியூமெக்சிகோ பல்கலைக்கழகம் (1967), குவெண்டர் உலோயசர் நினைவு விருது, வான்படை கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சி ஆய்வகங்கள் (1967), பொதுசேவைத் தகைமைக்கான இராக்ஃபெல்லர் விருது (1969), சுவார்த்மோர் கல்லூரியின் தகைமை அறிவியல் முதுமுனைவர் பட்டம் (1970), தன்னிகரிலா சாதனை விருது, வான்,வின்வெளி ஆராய்ச்சிஅலுவலக வான்படை (1970) போன்ற விருதுகள் அளிக்கப்பட்டன.

எவான்சு தன் பணியில் இருந்து 1974ல் ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்றதும் இவருக்கு ஜார்ஜ் எல்லேரி ஃஏல் பரிசு அமெரிக்க வானியல் கழகத்தின் சூரிய இயற்பியல் பிரிவால் 1982ல் வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு 1987ல் அமெரிக்க ஒளியியல் கழகத்தால் டேவிட் இரிச்சர்சன் பதக்கம் வழங்கப்பட்டது. இது இவரது பயன்முறை ஒளியியலில் சிறந்த பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட்து. இவரது பெயர் 1987ல் எவான்சு சூரிய ஏந்து அமைப்புக்கு இடப்பட்டது. அக்டோபர் 31, 1999ல் தனது 89வது அகவையில், நியூமெக்சிகோ, அமெரிக்காவில் மனைவி பெட்டி அவர்களுடன் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இது எதிர்ப்பாளரின் கொலையா அல்லது தற்கொலையா தெரியவில்லை. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!