Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் 11,69,020 வாக்காளர்கள்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 11,69,020 வாக்காளர்கள்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஜன.22- இந்திய 

தேர்தல் ஆணைய உத்தரவு படி, ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று வெளியிட்டார். அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதி 1374 பாகங்களில் 5,80,871 ஆண்கள், 5,88,081 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 68 பேர் என 11,69,020 வாக்காளர்கள் உள்ளனர். 2023 அக் 27ல் அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 5,73,462 ஆண்கள், 5,78,771 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 69 பேர் என 11,52,302 வாக்காளர்கள் இருந்தனர். 2023 அக்.27க்குப் பின் பெறப்பட்ட மனுக்கள் படி 12,199 ஆண்கள், 14,702 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என 26,904 வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே காலத்தில் பெறப்பட்ட மனுக்கள் படி 4,790 ஆண்கள, 5,392 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என 10,186 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இன்று வெளியிடப்பட்ட  இறுதி வாக்காளர் பட்டியல் படி, பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,25,058 ஆண்கள், 1,27,561 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் என 2,52,642, திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 1,45,786 ஆண்கள், 1,46,403 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என 2,92, 214, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,55,397 ஆண்கள், 1,58,825 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 14 பேர் என 3,14,236 , முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,54,630 பெண்கள், 1,55,292 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர் 6 என 3,09,928 நான்கு தொகுதிகளில் 5,80,871 ஆண்கள், 5,88,081 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 68 பேர் என 11,69, 020 வாக்காளர்கள்  உள்ளனர். இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வாக்குப் பதிவு அலுவலர்களின் ராமநாதபுரம். வருவாய் கோட்டாட்சியர், பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகங்கள், உதவி வாக்குப் பதிவு அலுவலர்களின் அனைத்து வட்டாட்சியர்கள், , ராமநாதபுரம் : பரமக்குடி நகராட்சி ஆணையர் அலுவலகங்கள: வாக்குச்சாவடி அமைவிடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் www.elections.tn.gov.in wo www.nvsp.in கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, சார் ஆட்சியர் அபிஷா கவுர், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், கோட்டாட்சியர் பாபு, தேர்தல் தாசில்தார் முருகேசன், தாசில்தார்கள் ஸ்ரீதரன் மாணிக்கம், பழனிக்குமார், சேதுராமன், சாமிநாதன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் அன்பு பகுர்தீன், செந்தில்குமார், காளீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com