17 மற்றும் 18ம் தேதி கீழக்கரை “MYFA Volley Ball Club” சார்பாக மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி..

கீழக்கரையில் வரும் பிப்ரவரி 17 மற்றும் 18ம் தேதி “MYFA Vollet Ball Club” சார்பாக மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி புதுத்தெரு அக்ஸா பள்ளி பின்புறம் உள்ள குளத்து மேட்டு பகுதியில் மாலை 06.00 மணி அளவில் நடைபெற உள்ளது.

இப்போட்டிக்கு பவுசுல் அலியுர் ரஹ்மான் தலைமையேற்கிறார். MYFA சங்க உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இப்போட்டியை கீழக்கரை காவல் ஆய்வாளர் முத்து மீனாட்சி துவக்கி வைக்கிறார்.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இஸ்லாமியா பள்ளி தாளாளர், ரய்யான் ஹஜ் சர்வீஸ், விடுதலை சிறுத்தை கட்சி, ஆரோக்கியா மருந்தகம், ஹபீப் டிரேடர்ஸ் – பூமா சூப்பர் மார்க்கெட் மற்றும் சென்னை மண்ணடி மேன்சன் ஆகியோர் வழங்க உள்ளனர்.