அழகன்குளத்தில் இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டி..

இராமநாதபுரம் அருகே அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கட்டி சீனி ஹபீப் நஜியா பொது நல அறக்கட்டளையின் சார்பில் இளைஞர் மேம்பாட்டு திறன் கருதி சல்ஹா அம்மாள் நினைவு கோப்பை கைப்பந்து போட்டி நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.

ஆற்றாங்கரை, அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, அத்தியூத்து, ஆற்றாங்கரை, சித்தார்கோட்டை, வாழூர் ஆகிய ஜமாத்களை சார்ந்த 8 அணிகள் பங்கேற்றன. இதற்கான பரிசளிப்பு விழா நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஜனாப் ஜமீல் கிராஅத் ஓதி விழாவை தொகுத்து வழங்கினார். ஜனாப் சாதிக் அலி சிறப்புரையாற்றினார். வாழூர் அணி முதல் பரிசு ரூ.10 ஆயிரம், புதுவலசை அணி 2 ஆம் பரிசு ரூ.7 ஆயிரம், சித்தார்கோட்டை அணி 3 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் பெற்றன.

இப்போட்டியை கட்டி சீனி ஹபீப் பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஹாஜி. ஹலிபுல்லாகான் ஏற்பாடு செய்தார். ஜனாப் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.