காட்பாடி அருகே வள்ளிமலை கோவில் கிரிவலப்பாதையில்பெண் எலும்புக் கூடு.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை கிரிவகப் பாதையில் உள்ள மலைபுள் புதரில் எலும்பு கூடான நிலையில் பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தவர்கள் மேல்பாடி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து சென்ற காவல்துறையினர் எலும்புக்கூடாக இருந்த 45 – வயது மதிக்கதக்க பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்துவருகின்றனர். பரிசோதனை முடிவில்தான் பெண் எப்படி? இறந்தார் என்பது குறித்து தெரியவரும்.