Home செய்திகள் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை அதிகரிக்க தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்..

கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை அதிகரிக்க தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்..

by mohan

தென்காசி மாவட்டத்தில் கோவிட் சிகிச்சை மையங்களில் படுக்கைகள் வசதி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:தென்காசி மாவட்டத்தில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா அலைவீசத் தொடங்கியுள்ளது. இந்நோயினை கட்டுப்படுத்த அனைத்து துறையினரும் கூட்டு முயற்சியோடு இணைந்து பணியாற்ற வேண்டும்; மேலும்,இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போன்று தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களினாலும் மற்றும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவிப்பதை தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததாலும் சமீப காலத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை உடனே தீவிரப்படுத்தவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்திடவும், காய்ச்சல் முகாம்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தபடும். கோவிட் சிகிச்சை மையங்களில் படுக்கை எண்ணிக்கை உடனடியாக அதிகப்படுத்தப்படும். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகள் முழுவதும் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள், சுபகாரியங்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும், முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். முக கவசம் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக்கூடாது.தொழிற்சாலையில்பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதன் ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். மேலும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும், நிலையான வழிகாட்டு நடைமுறையைப் பின்பற்றி திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலம் 50 நபர்களுக்கு மிகாமலும் நடைபெறலாம். மேலும், வருவாய்த்துறையினர் தலைமையில் இந்நிகழ்வுகள் குறிப்பிட்ட நபர்களுக்கு மிகாமல் நடைபெறுகின்றனவா என அவ்வப்போது ஆய்வு செய்திட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கொரோனா நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப மருத்துவமனையிலோ அல்லது தங்கள் வீடுகளிலோ தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் முன் வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று உறுதியானால் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் சமுக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசங்களை அணிந்து கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாத்திட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com