வேலூரில் வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் விக்கிரமராஜா சங்க கொடி ஏற்றினார்.

வேலூர் பகுதிகளில் சங்க கொடி ஏற்ற வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா வேலூர் பர்மா பஜாரில் சங்க கொடியை ஏற்றிவைத்தார். இதில் வேலூர் தலைவர் ஞானவேலு, பர்மா பஜார் தலைவர் கண்ணன், செயலாளர் சரவணன் துணைத்தலைவர் மோகன், நிர்வாகிகள் பாபு, இலியாஸ், வெங்கடேசன், காசீம், குமரவேல், மாலிக், இஸ்பான், பாசில், மனோ, சேகர், கோவிந்தன், ஏழுமலை, யூசுப், பிலால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வேலூரிலிருந்து கே.எம். வாரியார்