வேலூர் அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி கிராமத்தை சேர்ந்த நடராஜன் பட்டா மாறுதல் செய்ய விஏஓ ரேவதியை அணுகினார். ஆனால் விஏஓ ரூ 2500 லஞ்சம் கேட்டு உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரேவதி பணம் பெற்ற போது கையும் களவுமாக பிடித்து பின்பு கைது செய்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்