
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் 1429 பசலி ஆண்டு ஜமாபந்தி காட்பாடி தாலுகா அலுவலகத்தில் துவங்கியது. மெரத்தம் 49 வருவாய் கிராமங்கள் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்கள் நேரடியாக பெற தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆன்லைனில் குறைகளை தெரிவிக்கும் படி அரசு தெரிவித்து உள்ளது. இதன்படி வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கிராம வருவாய் கணக்குகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வில்சார் ஆட்சியர் (பயிற்சி) பூரணி வட்டாட்சியர் பாலமுருகன் பங்கேற்று வருகின்றனர்.வரும் 6-ம் தேதி வரை ஆய்வு நடைபெறும் சனி, ஞாயிறு விடுமுறை ஆகும். வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் வந்து சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து கணக்குகளை அளித்து வருகின்றனர் –
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.