Home செய்திகள் வேலூர் – துரைமுருகனுக்கு ஏ.சி.சண்முகம் கண்டனம்

வேலூர் – துரைமுருகனுக்கு ஏ.சி.சண்முகம் கண்டனம்

by mohan

சென்னைக்கு ஜோலார்பேட்டையிலிருந்து குடிநீர் எடுத்து செல்வதை தடுக்க நினைக்கும் துரைமுருகன் செயல் நாகரிகம் இல்லை: ஏ.சி.சண்முகம் பேச்சு .

வேலூர் பென்ஸ் பார்க் ஓட்டலில் வேலூர் அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலூர் பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் செய்து முடித்து உள்ளோம். அடுத்த கட்டமாக 1-ம் தேதி 6 சட்டமன்ற தொகுதியிலும் மீண்டும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.வேலூர் பாராளுமன்ற தொகுதியில் +2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களுக்கு ஏசிஎஸ் கல்வி குழுமத்தில் உள்ள கல் லூரி பட்டப் படிப்பு மற்றும் பட்டய படிப்புக்கு 660 பேருக்கு சீட் ஒதுக்கி உள்ளோம். இவர்களின் செலவு ரூ 5 கோடியை நிர்வாகமே ஏற்கிறது.[காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் உபரி நீர் தான் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்ல குழு ஆய்வு மூலம் செயல்படுத்த உள்ளது. காட்பாடியை சேர்ந்த முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் ஜோலார்பேட்டையிலிருந்து எடுத்து செல்ல விடமாட்டேன் என்கிறார் அப்படியானால் வீராணம் ஏரி விருந்து சென்னைக்கு எடுத்து வர அந்த மக்கள் எதிர்த்தார்கள். 10 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராக துரைமுருகன் இருந்த போது பாலாற்றில் எந்த ஒரு செக்டேமையும் கட்டவில்லை காட்பாடியில் அருவி மினரல் வாட்டர் வைத்து உள்ளார் – அவர் இலவசமாக தண்ணீர் பாட்டில் கொடுக்கலாமே?குறுகிய வட்டத்தில் பேசுவது அவருக்கு அழகல்ல என்று அவர் கூறினார்.உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!