Home செய்திகள் காட்பாடி பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்.

காட்பாடி பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்.

by mohan

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிவருகிறது.இந்த மருத்துவமனைக்கு உட்பட்ட கருவுற்றதாய்மார்களுக்கு மருத்துவர்கள் மூலம் பிரசவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக (தமிழகம் முழுவதும்) செய்துவருவது நாம் அறிந்தது ஒன்றுதான்.அதன்படி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு கருவுற்ற நாள் முதல் செவிலியர்கள் துணையுடன் மருத்துவ பரி சோதனை செய்வதுடன் மருந்துமாத்திரைகள், கொடுக்கப்பட்டு வருகின்றன. வாரத்திற்கு ஒருமுறை மருத்துவ சோதனை செய்வதுடன், குழந்தை சிறப்பு வளர்ச்சி, பரிந்துரை, கண்காணிப்பதுடன் ஊட்டச்சத்தும் வழங்கப்படுகிறது.இந்த நிலையில் பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் எஸ்.பி.மோகன்தாஸ் இணைந்து கருவுற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு நெய், பேரீச்சை, சத்துமாவு பவுடர் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர். அருகில் கிராம சுகாதார செவிலியர்கள் தீபா, ஜெயந்தி ஆகியோர் இருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com