Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி -2018” நிகழ்வு..

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி -2018” நிகழ்வு..

by ஆசிரியர்

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் புதிய தலைமுறை இணைந்து நடத்திய  வீட்டுக்கொரு விஞ்ஞானி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி கல்லூரி நெறியாளர் முனைவர் முஹம்மது ஜஹாபர் தலைமையிலும், புதிய தலைமுறை மதுரை மண்டல தலைமை மேலாளர் ராஜர், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன் முன்னிலையிலும்  நடைபெற்றது.

கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அழகிய மீனாள் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. வீரராகவ ராவ் கலந்து கொண்டு  மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில் மாணவர்களாகிய நீங்கள் பல்வேறு அறிவுத்திறனை வளர்க்கவும் சுற்றுச்சூழல், மாசுபடுதலை தடுக்கவும் சூரிய ஒளியை கொண்டு வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய சாதனங்களை இங்கு  உருவாக்கி உள்ளீர்கள் அதனை கண்டு இந்த இளம் வயதிலேயே இதுபோன்ற படைப்புகளை படைத்துள்ளமைக்கு பாராட்டுகிறேன். பள்ளி மாணவர்களாகிய நீங்கள் நாம் இருக்கும் வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள நீங்கள் பயன்படுத்திய பிறகு தேவையில்லாத குப்பைகளை குப்பை தொட்டியில் போடும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிப் பைகளை உபயோகப்படுத்துவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு மாணவரும் நீங்கள் சுற்றியிருக்கும் பகுதிகளில் 5 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து  அதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற உறுதி மேற்கொள்ள வேண்டும். நமது இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும், அனைத்து உரிமையும் வழங்கப்படுகிறது அதே சமயம் நமது நாட்டில் தான் அதிகமான இளைஞர்களும் உள்ளனர் ஆகவே மாணவர்களும்இ இளைஞர்களும் இணைந்து முதலில்  சுற்றுபுறத்தை தூய்மையாக வைப்பதன் மூலம் நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்ந்து நமது நாட்டை வல்லரசு நாடாக உருவாவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த அனைத்து பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் 6-8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 73, பள்ளிகளிலிருந்தும் 9-12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 47 பள்ளிகளிலிருந்தும் இரண்டு கட்டமாக அவர்களது சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த சாதனம், சாலை விழிப்புணர்வு, நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, பேரிடர் மேலாண்மை, மின்சார சேமிப்பு மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு பற்றிய 130 ஆராய்ச்சி படைப்புகளை படைத்திருந்தனர்.

சீனியர் லெவலில் முதலிடம் பிடித்த இன்பன்ட் ஜீஜஸ்  படைப்பான சுகாதாரமான முறையில் நாப்கீனை அழிக்கும் சாதனம், சனவேலி அரசு மேல்நிலைப்பள்ளி, மின்சாதன கழிவுகளிலிருந்து சூரிய ஆற்றல் சேகரிப்பு, மூன்றாவது இடம் பரமக்குடி டான்பாஸ்கோ வான் ஆராய்ச்சிக்கு மீயொலி ரோபா சாதனம், ஜீனியர் லெவலில் பரமக்குடி டான்பாஸ்கோ பள்ளி, காதுகேளாதவர்களுக்கு ஒலி அலைகள் மூலம் ஓசைகளை கண்டறிதல், இரண்டாம் இடம் இன்பன்ட் ஜீஜஸ் பள்ளி ஸமார்ட் சிட்டி, ஸமார்ட் ரோடு மூலம் மழை நீரை பயன்படுத்துவது, மூன்றாவது இடம் இருமேனி அரசு மேல்நிலை பள்ளி மின்சார சேமிப்பு, இதில் சிறந்த படைப்புக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி; மற்றும் கல்லூரி நெறியாளர் முனைவர் முஹம்மது ஜஹாபர் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினி பொறியியல் துறை துணைப் பேராசிரியர் சேக் யூசுப்  மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.


EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com