உடலுக்கும் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் சாணார்பட்டி “டாஸ்மாக்”.. வீடியோ செய்தி..

சாணார்பட்டி – மஞ்சநாயக்கன்பட்டி சாலையில் கடந்த 2 வருடமாக இயங்கி வரும் அரசு டாஸ்மாக் *மதுபானக் கடை எண் : 3309* மதுபானக்கடையை சுற்றியுள்ள விளை நிலங்களில் 1 வருடமாக தேங்கியுள்ள பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், வாட்டர் பாக்கெட்டுகள், கேரி பேக்குகள், கண்ணாடி பாட்டில்கள் தேங்கி உள்ளது. இதனால் மண் வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடிநீர் கீழே இறங்காமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இது சம்பந்தமாக பல தடவை அரசு துறையினர் மற்றும் காவல் துறையில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதே போல்  இவ்வூரை சுற்றியுள்ள நத்தமாடிபட்டி, கொசவபட்டி மக்கள் ஆர்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்ட பின் சுத்தம் செய்ததாக புகைப்படத்துடன் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளனர். இத்துடன் இன்று (06/09/2018) எடுத்து இணைக்கபட்டுள்ள காணொளி மற்றும் புகைப்படங்களே அதற்கு அத்தாட்சி.

மேலும் இந்த மதுபானக்கடையின் பார் உரிமையாளர் மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த  முன்னாள் தி.மு.க பிரமுகர் மற்றும் இந்நாள் அ.தி.மு.க பிரமுகராக இருப்பதால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

மேலும் தமிழக அரசு அனுமதி அளித்த மதுபானகடை திறப்பு நேரம் நண்பகல் 12.00 மணி அல்லாது 24 மணி நேரமும் சேவையாக அந்த கடை இயங்கி வருகிறது. மதுபானக்கடையை சுற்றியுள்ள நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் . ——————————————————————-