ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் உள்ள அல் அமீன் மழலையர் பள்ளியில் 30ம்ஆண்டு விழா ரஹ்மத்துல்லா ஆலிம் தலைமையில் முகமது மன்சூர் , அப்துல் ரஷீத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பள்ளியின் மாணவ மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கிராத் ஓதி துவங்கினர். பள்ளியின் முதல்வர் ஜெசிமா பேகம் வரவேற்புரை வழங்கினார். பள்ளியில் ஆசிரியர் கனிமொழி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் உச்சிப்புளி சுகாதார ஆய்வாளர் மகேந்திரன் , ராமநாதபுரம் காவல் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஆண்டனி சகாய சேகர் , ராமநாதபுரம் பாம்பே டையிங் நிறுவனர் சையது ஜாபர் அலி , மண்டபம் ஜெயமணி பள்ளி தாளாளர் மற்றும் வழக்கறிஞர் ஜெபத்துரை மற்றும் ஆசீர் ஜாஸ்மின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு இறுதியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.
You must be logged in to post a comment.