மண்டபம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி போராட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தங்கை ஆசிஃபா வின் பாலியல் படுகொலைக்கு நீதி வேண்டியும், அதற்கு காரணமான காட்டுமிராண்டிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை வழங்க வழியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த மனிதாபிமானமற்ற செயலை ஆதரித்தும்,  குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய,  பாஜக அமைச்சர்களையும் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களிலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்லும் பாஜக காட்டுமிறாண்டிகளையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இச்செயலுக்கு இந்திய பிரதமர் மோடி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என  வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் செயலாளர் நாகூர் கனி தலைமை தாங்கினார். மீனவர் மேம்பாட்டு பேராயம் மாவட்ட அமைப்பாளர் ஜபருல்லா,  முன்னாள் செய்தி தொடர்பாளர் மணிகண்ட முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக்,  இராமநாதபுரம் தொகுதிச் செயலாளர் அற்புதக்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் சத்தியராசு வளவன், திருவாடாணை தொகுதிச் செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
பாம்பன் ஊராட்சி செயலாளர் சீமோன் , இஷாஜ் அகமது உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்  பலர் கலந்துக் கொண்டனர்.