Home செய்திகள் 4.1.2024ம் தேதி ஒன்றிய அரசுக்கு எதிராக திண்டுக்கல்லில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு சிறுத்தைகள் பெரும்திரளாக கலந்துகொள்ள வேண்டும். பெ.ச.உலக நம்பி அழைப்பு.

4.1.2024ம் தேதி ஒன்றிய அரசுக்கு எதிராக திண்டுக்கல்லில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு சிறுத்தைகள் பெரும்திரளாக கலந்துகொள்ள வேண்டும். பெ.ச.உலக நம்பி அழைப்பு.

by mohan

ஜனவரி 4 ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இந்த மாநாடு சம்பந்தமாக மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளரை தொல். திருமாவளவன் அறிவிப்பு செய்துள்ளார்.திண்டுக்கல் மாவட்ட ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளராக மாநில பொருப்பாளர் பெ.ச.உலக நம்பி செயல்படுவார் என்று தொல்.திருமாவளவன் அறிவித்திருந்தார்.இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பெ.ச.உலகநம்பிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் கூறி கௌரவித்தனர்.இந்நிகழ்வில் மண்டல துணைச்செயலாளர் அன்பரசு,மாநகர் மாவட்ட செயலாளர் மைதீன் பாவா,கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ் முகம்,தொழிலாளர் விடுதலை முன்னனி மாநில துணைச்செயலாளர் திருச்சித்தன், ஓவியரணி மாநில துணைச்செயலாளர் தமிழ் முரசு,சவரியம்மாள், பால்ராஜ்,ரமேஷ், முத்தமிழன், வெற்றிச் செல்வன், ராமகிருஷ்ணன், முத்துகணேஷ், டேக்க வான்டோ பாலன், நல்லுச்சாமி, மயில்ராஜ் செல்வம், வீரலெட்சுமி, தமிழ் வளவன், ராஜ் வளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக பெ.ச.உலகநம்பி கூறியதாவது-

,ஜனவரி 04, அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.தமிக அரசுக்கு ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 21 கோடி வழங்க வேண்டும்,தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும்,2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.ஆகிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 04.01.2024 அன்றுமாலை 3 மணிக்கு திண்டுக்கல் மணிக்கூண்டு அருகேஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆகையால் திண்டுக்கல் மைய மாவட்ட, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, முகாம், அனைத்து நிலை பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி உங்களை அன்புடன் அழைக்கிறேன் என அழைப்பு விடுத்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!