வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டன குரல்..

கடந்த ஒரு வாரமாகவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போர் களமாக மாறியுள்ளது.  இது சம்பந்தமாக இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாயினர்.  இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து பல் வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று (25-05-2018) தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக இழுத்து மூடவும்,ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி பேரணியில் காவல்துறை நடத்திய காண்டிமிரண்டிதனமான தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு  கண்டித்தும் இதற்கு காரணமான தமிழக அரசை கண்டித்தும் வண்ணாங்குண்டில் ஜும்மா தொழுக்கைப்பின் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதில்  ஏராளமான இளைஞர்கள்  கண்டன பதாகைகளுடன் கலந்து கொண்டு கண்டங்களை பதிவு செய்தனர்.