பார்த்திபனூரில் இருந்து வைகை நீர் திறப்பு..

இராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கென்று வைகை அணையில் இருந்து வரப்பெற்ற நீரை இன்று நமது மாவட்ட ஆட்சியர் நடராஜன் பார்த்திபனூரிலிருந்து மலர் தூவி திறந்து விட்டார்.

இந்நிகழ்வின் போது நீர் பாசன பொதுப் பணி துறை செயற் பொறியாளர் வெங்கட கிருஷ்ணன், கலெக்டர் உதவியாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

இதனால் கீழக்கரை நகராட்சி மூலம் கிடைக்கப் பெறும் குடிநீர் தேவை சில மாதங்களுக்கு பூர்த்தியாகும் என அறியப்படுகிறது.