வடகரையில் கல்வி மேதை சாகுல் ஹமீது மிஸ்பாஹி படிப்பகம் திறப்பு விழா; சிறப்பு அழைப்பாளராக செங்கோட்டை நூலகர் இராமசாமி பங்கேற்பு..

வடகரையில் கல்வி மேதை சாகுல் ஹமீது மிஸ்பாஹி படிப்பகம் திறப்பு விழா; சிறப்பு அழைப்பாளராக செங்கோட்டை நூலகர் இராமசாமி பங்கேற்பு..

தென்காசி மாவட்டம் வடகரையில் எஸ்டிபிஐ கட்சியின் தீ.ப. கிளை சார்பில் அரசுபோட்டி தேர்வர்களின் வசதிக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும், கல்விக்காக அரும்பாடுபட்ட வடகரை கல்வி மேதை சாகுல்ஹமீது மிஸ்பாஹி நினைவாக படிப்பகம் திறக்கப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளராக செங்கோட்டை நூலகர் இராமசாமி கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தார். இந்த படிப்பகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயனடையும் வகையில் புத்தகங்கள் பல வைக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் தீ.ப.கிளைத் தலைவர் சேக் முகம்மது அலி தலைமை வகித்தார். மாவட்ட ஊடக அணி செயலாளர் சேக் முகம்மது அலி, மாவட்ட மகளிரணி தலைவர் பரக்கத், செயலாளர் யாஸ்மீன், மாவட்ட விவசாய அணி செயலாளர் முகம்மது காசிம், நகர செயலாளர் ஷாஜித் ஒலி, நகர துணைத் தலைவர் காஜா செரீப், நகர செயற்குழு உறுப்பினர் யாசீன், வாவாநகரம் கிளை தலைவர் அன்சாரி, தீ.ப.கிளை செயலாளர் மர்கா, நகர ஊடக அணி பொறுப்பாளர் ஆசிக், பேச்சாளர் சித்திக் ரியாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் அப்துல் பாசித் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துவக்க உரை பட்டிமன்ற பேச்சாளர் மஹ்மூதா, வாழ்த்துரை ஆசிரியர் வாவை கபீர் மற்றும் ஆசாத் அகாடமி மற்றும் டார்கெட் டியூசன் செய்யது குலாம் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக செங்கோட்டை அரசு நூலகர் இராமசாமி (நன்நூலகர்), விழுதுகள் அறக்கட்டளை நிறுவனரும் சாதனையாளர் விருது பெற்ற சேகர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்து அரசு போட்டி தேர்வுக்கான முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்