Home செய்திகள் விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம்

விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம்

by mohan

உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற விவசாய குறைதீர்ப்பு முகாமில்  உசிலை வட்டார விவசாயிகள் விவசாய சங்கத்தினர் மற்றும் 58 கிராம கால்வாய் இளைஞர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டு பல கோரிக்கைகளை முன்வைத்தனர்…

1. கல்லூத்து பெருமாள் பட்டியில் அருகே 58 கிராம கால்வாயில் போடப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்…

பதில்: உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

2 . கருக்கட்டாண்பட்டி கண்மாய் வரத்து கால்வாயில் தண்ணீர் வருவதை தடுக்கும் வகையில் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள தடுப்புசுவரை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதில் : நேரடியாக இரு தினங்களில் ஆய்வு செய்யப்படும்

3. சடச்சிபட்டி கண்மாய்க்கு 58 கிராம கால்வாய் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்

பதில் : அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்படும்

4. 100 நாள் வேலை திட்டத்தினை விவசாயிகளுக்கு உதவிகரமாக விவசாய பணிகளுக்கு பயன்படுததிட மாவட்ட ஆட்சியரிடம் ஆவணப்படுத்த வேண்டும்

பதில் : நல்ல கோரிக்கை… உடனடியாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்

5.வில்லாணி கிராமத்திற்கு சேடபட்டி கூட்டு குடிதண்ணீர் முறையாக வழங்க வேண்டும் அதிக நேரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பதில் : ஊராட்சி ஒன்றியத்தின கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்

6. விவசாயிகளுக்கான வண்டல் மண் கண்மாய்களில் இருந்து எடுக்க வழிமுறைகள் தெரிவிக்க வேண்டும்

பதில் : உசிலம்பட்டி தாலுகாவில் மண் அள்ளகூடிய கண்மாய்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

7.58 கிராம கால்வாய் திட்டத்தின் மூலம் பாப்பாபட்டி உள்ள சின்னகுளம் கண்மாய்க்கு ஏன் தண்ணீர் செல்லவில்லை… ஏன்

பதில் : நீர் வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதில் : ஒரு நாள் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது…

இது போன்ற பல கோரிக்கைகளை விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் வலியுறுத்தினர்… தாசில்தார்  நடவடிக்கை எடுக்க துரிதப்படுத்துகிறேன் என்றார்.58 58 கிராம கால்வாய் இளைஞர்கள் சங்கத்தின் சாா்பில் சௌந்திரபாண்டி பால்ராஜ் அருண் உள்பட பலா் பங்கேற்றனா்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!