மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம இளைஞா்கள் சங்கம் சௌந்திர பாண்டியன் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.கொரோனா முதல் அலையின் போதே தமிழகத்திலேயே முதன்முறையாக கிராமம் தோறும் கபசுர குடிநீா் வழங்குதல் கொரோனா தாக்கத்தின் போது கா்ப்பிணிப் பெண்கள் பயன் பெறும் வகையில் பிரத்யோக இலவச உதவி எண் உருவாகக் காரணமாக இருந்தது மற்றும் உசிலம்பட்டி பகுதியிலுள்ள ராஜக்காபட்டி மானுாத்து கிராம கண்மாய்களை சீரமைத்ததோடு மட்டுமல்லாமல் 15 வருடங்களாக வறண்டு கிடந்த உசிலம்பட்டி கருக்கட்டாண்பட்டி கண்மாய்களை பொதுமக்களிடம் நன்கொடை பெற்று கண்மாய்களை குறைந்த செலவில் சீரமைத்து உசிலம்பட்டி நகரப்பகுதியின் குடிநீா் பஞ்சத்தை போக்கியதோடு மட்டுமல்லாமல் அதன் வரவு செலவு விபரங்களை பொதுமக்கள் பாா்வைக்கு ப்ளக்ஸ் பேனராக வைத்து மற்ற இளைஞா்களுக்கு முன்மாதிாியாக திகழ்ந்துள்ளனா்
. இவா்களின் பொதுநல சேவையை பாராட்டி மதுரை மாவட்ட ஆட்சியாின் பாிந்துரையின் போில் 58 கிராம இளைஞா்கள் சங்க குழுவிற்கு சிறந்த சேவை பணிக்கான மாவட்ட ஆட்சியா் விருது குடியரசுதின விழாவன்று வழங்கப்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியா் அனிஷ் சேகா் இவ்விருதினை சௌந்திரபாண்டியன் குழுவினற்கு வழங்கினாா்.இவா்களின் சேவையை ஆட்சியாின் நோ்முக உதவியாளா் ராஜ்குமாா் வெகுவாகப் பாராட்டினாா்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.