மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை உருவானது..இந்நிலையில் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்தன.பாண்டி மற்றும் சமுத்திரம் ஆகியோரின் வீடுகள் இடிந்தன.அச்சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.உசிலம்பட்டி வண்டிப்பேட்டைத் தெருவில் மழையால் மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது.
கடைகள் மிகுந்த அத்தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.சம்பவமறிந்த மின் வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் மின் விநியோகத்தை நிறுத்தி மின் வயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.உசிலம்பட்டிப் பகுதியில் நேற்று 6செமீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது..
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.