Home செய்திகள் 58கிராம கால்வாயில் தண்ணீர் வந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக 58 பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்

58கிராம கால்வாயில் தண்ணீர் வந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக 58 பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்

by mohan

வைகை அணையின் நீர்மட்டம் 69அடியை எட்டியவுடன் அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் மூலம் உசிலம்பட்டிப் பகுதியிலுள்ள 35 கண்மாய்கள் பாசனவசதி பெறும் வகையில் 58 கிராமகால்வாய்;த்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது; வைகை அணையிலிருந்து தற்போது 58 கிராமகால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்த நீர் தற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பகுதிக்கு வந்துள்ளது. .இந்நிலையில 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு காரணமான இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக உத்தப்பநாயக்கனூர் அருகே 58 கிராம கால்வாய் கடை மடை அமைந்துள்ள பகுதியில் 58 பெண்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயக்குமார் கலந்து கொண்டு பொங்கல் வைத்த பெண்களுக்கு சேலைகள் வழங்கி கௌரவித்தார். இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்,நகரசெயலாளர்பூமாராஜா, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் துரைதனராஜன்,உசிலம்பட்டி பொதுக்குழு உறுப்பினர் மாவட்ட கவுன்சிலர் சுதாகரன்,செல்லம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராஜா,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன் ,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் மகேந்திர பாண்டியன்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பொத்தி ராஜா, செல்லம்பட்டிரகு,உசிலை ஒன்றியம் நகர கழக நிர்வாகிகள் கேஸ் லட்சம் உக்கிரபாண்டியன் நடு பாண்டி அலெக்ஸ் பாண்டி பாண்டி மகேஸ்வரன் ரத்தினம் மணி பால் துறை உசிலை நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கடந்த 2014 நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் முல்லைப் பெரியாறு அணையில் 3 முறை 142அடி நீர் தேங்கி வைக்கப்பட்டுள்ளது.ஆனால் தற்போது திமுக அரசு புதிய விதிமுறைகளை காரணம் கூறி மொட்;;டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு தண்ணீர் தேக்க மறந்து விட்டது என குற்றம் சாட்டினார்

உசிலை  சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!