Home செய்திகள் சவாலான கண்மாய் சீரமைப்பை “நமக்கு நாமாய்” நின்று சீரமைத்த இளைஞர்கள்.

சவாலான கண்மாய் சீரமைப்பை “நமக்கு நாமாய்” நின்று சீரமைத்த இளைஞர்கள்.

by mohan

தூரத்திலிருந்து பார்த்தால் பச்சைப்பசேலன்று மரங்கள் வளர்ந்து பார்க்க பசுமையாய் காட்சியளிக்கின்றன கண்மாய்.அருகில் சென்று பார்த்தால் ஒன்றுக்கும் உதவாத சீமைககருவேல மரங்கள் கண்மாய் முழுவதும் வளர்நதுள்ளன.இவற்றை அகற்றி கண்மாயை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் தன்னார்வ இளைஞர்கள்..இது பற்றிய செய்தி தொகுப்பைக் காணலாம்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கருக்கட்டாண்பட்டி கிராமம்.இக்கிராமத்தில் 600க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்கிராமத்தின் அருகில் சுமார் 16 ஏக்கரில் பரப்பளவில் கண்மாய் உள்ளது.இககண்மாயில் கருக்கட்டாண்பட்டி மட்டுமல்லாது அருகிலுள்ள மாமரத்துப்பட்டி மாதரை வில்லாணி ஒத்தப்பட்டி ஆகிய கிராமங்களும் பாசன வசதி பெறும்.மற்றும் உசிலம்பட்டி நகரப்பகுதிகளுக்கு குடிநீருக்கு ஆதரமாக விளங்குகிறது.இக்கண்மாய் கடந்த 30வருடங்களாக பராமரிக்கப்படாமல்; பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்தும் சீமைக்கருவேல மரங்கள் ஆலமரம் போல் வளர்ந்து புதர் மண்டிக் காணப்பட்டது.இரவு நேரங்களில் பெண்கள் கண்மாய் பகுதியில் செல்லவே பயப்படும் அளவுக்கு மரங்கள் வளர்ந்து அடர்வனக் காடாய் காட்சியளித்தது.இக்கண்மாயை சீரமைக்க வேண்டுமென கிராமமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் பலனில்லை.உசிலம்பட்டிப் பகுதியில்; கண்மாய் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைத்து வரும் 58 கிராம கால்வாய் இளைஞர் குழுவிற்கு கருக்கட்டாண்பட்டி இளைஞர்கள் தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து அறிநத சௌந்திரபாண்டியன் தலைமையிலான 58 கிராமகால்வாய் இளைஞர் குழுவினர் கண்மாயை சீரமைப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரிடம் முறையாக அனுமதி பெற்று கருக்கட்டாண்பட்டி கண்மாயை சீரமைக்கும் பணியில் இறங்கினர்.

முதற்கட்டமாக 58 கிராம கால்வாய்த்திட்டத்தின் மூலம் உசிலம்பட்டி கண்மாயிலிருந்து; கருக்கட்டாண்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வரும் 1.5கி.மீ நீளமுள்ள வரத்துக் கால்வாய் பாதைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைத்தனர்.பின் சமூகஆர்வலர்கள் நிதியுதவியுடன் கண்மாயில் ஆலமரமாய் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களையும் 10அடிஆழத்திற்கு கண்மாயில் புதைந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றினர்..அதன் பின் நிதியுதவி வழங்கிய தன்னாவலர்களை அழைத்து கண்மாய் சீரமைப்புப் பணிகளை காண்பித்து அவர்களை கௌரவப்படுத்தியோடு மட்டுமில்லாமல் அவர்கள் கைகளிலானே கருக்கட்டாண்பட்டி கண்மாயில் 250க்கும்; மேற்பட்ட 20அடி மரங்களை கண்மாய் கரையில் நட்டு வைத்தனர்..மேலும் வழக்கம் போல் தங்கள் இளைஞர் குழு நேர்மையை மக்களுக்கு உணர்த்தும்; வகையில் கண்மாய் சீரமைக்க நிதியுதவி வழங்கியவர்களின் பட்;டியல் தொகை மற்றும் சீரமைக்க உண்டான வரவு செலவுகளை பிளக்ஸ் பேனராக கண்மாள்கரை ஓரத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர்.தற்போது கண்மாயை சீரமைத்ததோடு தங்கள் பணி முடிந்து விட்டது என ஒதுங்கி விடாமல் கண்மாய்கரையில் வைத்த மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பாக வலை அமைத்து தினமும் தண்ணீர் ஊற்றி பாராமரித்து வருகின்றனர்.ஏற்கனவே உசிலம்பட்டி ராஜக்காபட்டி உள்பட பல கண்மாய்களை இந்த 58 கிராம கால்வாய் இளைஞர் குழுவினர் சீரமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..

எதற்கெடுத்தாலும் அரசைக்குறை சொல்வதை விட்டு விட்டு அரசின் உதவியுடன் இளைஞர்கள் நினைத்தால் நமக்குநாமே எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த இளைஞர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!