ஆனையூர் பகுதிகளில் திருக்குறளை முன்னிறுத்தி 1330 பனைவிதைகள் நடப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணையூர்,

கட்டக்கருப்ன்பட்டி ஆகிய பகுதிகளில் அனைத்து அமைப்பு சார்பாக மற்றும் உசிலம்பட்டி சமூக ஆர்வலர்கள் சார்பாக திருமங்கலம் பிரதான கால்வாய் இரண்டு கரை பகுதிகளிலும் திருக்குறளை மையமாக வைத்து 1330 பனை விதைகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து பனை விதைகள் நட்டனர், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் கட்டகருப்பன்பட்டி சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆணையூர் பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து பனை விதைகள் விதைத்தனர், அனைத்து அமைப்பும் ஒன்று சேர்ந்து பனை விதைகள் நடப்பட்டதுக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..