உசிலம்பட்டி அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பஞ்சாயத்தைச் சேர்ந்தது கே.பாறைப்பட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி.விவசாயியான இவர் தனது தோட்டத்தின் கிணற்றின் அருகே பசுமாட்டை மேய்ச்சலுக்காக கட்டி வைத்து விட்டு விவசாயப்பணிகளை கவனிக்கச் சென்று விட்டார்.அப்பொழுது பசுமாடு எதிர்பாரதவிதமாக அருகிலிருந்த 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.(கிணற்றில் தண்ணீர் உள்ளது).உடனடியாக அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினர் நிலைய அலுவலர் தங்கம் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி பசு மாட்டை கயிறு கட்டி சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

உசிலை சிந்தனியா