Home செய்திகள் 58 கிராம கால்வாய் இளைஞா்கள் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியாிடம் மனு

58 கிராம கால்வாய் இளைஞா்கள் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியாிடம் மனு

by mohan

வைகையின் நீா்மட்டம் உயா்ந்து வரும் நிலையில் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் இளைஞா்கள் குழு சாா்பாக மதுரை மாவட்ட ஆட்சியாிடம் மனு வழங்கப்பட்டது.இதில் முதலில் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மரகன்றுகள் வழங்கி மனு அளிக்கப்பட்டது…மனுவின் விபரம் வருமாறு..1.வைகை அணையில் 68 அடியை எட்டியும் 58 கிராம கால்வாயில் தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து 58 கிராம கால்வாயில் முழு சோதனை ஓட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் 35 கண்மாய்களையும் இம்முறை நிரப்பி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது …அதே போல் கடந்த முறை கால்வாயில் தண்ணீர் வரும் போது அதிகாரத்தில் உள்ள சிலர் தங்களின் சுயலாபத்திற்காக தண்ணீரை அவர்கள் பகுதிக்கு கொண்டு செல்வதால் பல கிராம மக்களிடையை வன்முறை மற்றும் மதகு பகுதி உடைக்கப்பட்டது ..

.. இதனால் இம்முறை அதிகாரிகள் முன்னின்றும் அதே சமயம் கடைமடை வரை செல்வதற்கு கண்மாய்களை வரைமுறை படுத்திட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது….58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து இம்முறை பணியாற்றிட கால்வாய்களை கண்காணித்திட அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்….அதே போல் மீனாட்சி புரம் கண்மாய்க்கு மதகு பகுதியை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது…..தாலுகா அளவில் விவசாய குறைதீர்ப்பு முகாம் நேரடியாக நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் 58 கிராம கால்வாய் இளைஞா்கள் குழு சாா்பாக சௌந்திரபாண்டியன் சமூக ஆா்வலா் பால்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!