Home செய்திகள் ஒரு கண்ணில் வெண்ணை.மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு. உசிலம்பட்டி சோதனைச் சாவடியில் போலிசாரின் அடிப்படை வசதிகளில் பராபட்சம்

ஒரு கண்ணில் வெண்ணை.மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு. உசிலம்பட்டி சோதனைச் சாவடியில் போலிசாரின் அடிப்படை வசதிகளில் பராபட்சம்

by mohan

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பொதுமக்களை வேகமாகப்பரவி வருகின்றது.இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு ழுழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனாமேலும் ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லையில் காவல்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு போலிசார் வெளிமாவட்;டங்களிலிருந்து வருபவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா எனப் பரிசோதனையில் ஈடுபட்டு அனுப்புகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் முனீஸ்வரன் கோவில் அருகில் மதுரை மாவட்ட எல்லை முடியும் இடத்தில் உசிலம்பட்டி காவல்துறை சார்பில் மாவட்ட எல்லை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இதில் ஓரு எஸ்ஐ – 4 போலிசார் என் 5 பேர் சுழறச்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.வெயில் மழை பாராமல் 24 மணி நேரமும் பணியாற்றிய போதும் இவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.இவர்கள் மழை பெய்தால் ஒதுங்குவதற்கு ஓய்வு எடுப்பதற்கும் காவல்துறை சார்பில் ஒரு கூரை மட்டுமே போடப்பட்டுள்ளது.அருகில் கழிப்பறை வசதியோ குடிநீர் வசதியோ செய்து தரப்படவில்லை.பெண் போலிசார் பணியில் ஈடுபட்டால் கடும்; சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இக்கூரையில் அமர்ந்துதான் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் அருகிலேயே 250 மீட்டருக்கு அப்பால் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் விருவீடு எல்லை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இங்கு வாகனச்சோதனையில் ஈடுபடும் போலிசாருக்கென ஓய்வு அறை பாத்ரூம் அறை குடிநீர் வசதிகளை உள்ளடக்கிய தனி அறை பிரத்யோகமாக கட்டப்பட்டுள்ளது.இதில் விருவீடு போலிசார் எவ்வித சிரமும் இன்றி தங்கி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இது உசிலம்பட்டி போலிசார் மத்தியில் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பரவி வரும் நிலையில் போலிசார் மாவட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த வருடம் முதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆரம்பத்தில் கூரை போடப்பட்டு அதில் பணியாற்றி வந்தனர் விருவீடு போலிசார்.அதன் பின் அனைத்து வசதிகளுடன் கூடிய அறை உருவாக்கப்பட்டது.ஆனால் அப்பொழுது முதல் மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் உத்தப்பநாயக்கனூர் முனீஸவரன் கோவில் அருகில் பணியாற்றும் உசிலம்பட்டி போலிசாருக்கு காய்ந்த கூரை மட்டுமே துணையாய் இருப்பதால் வெளியில் கூற முடியாமல் பரிதவிப்பில் உள்ளனர்.காவல்துறைக்குள் போலிசாருக்குள்ளேயே பாரபட்டசமா என சமூக ஆர்வலர்களும் தங்கள் வேதனையைத் தெரிவிக்கின்றனர்.

உசிலைசிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!