Home செய்திகள் உசிலம்பட்டி பகுதியில் கொரோனா ஊரடங்கினால் கால்நடைகளுக்கு தீவனமாகும் சுரைக்காய் .

உசிலம்பட்டி பகுதியில் கொரோனா ஊரடங்கினால் கால்நடைகளுக்கு தீவனமாகும் சுரைக்காய் .

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான குப்பணம்பட்டி, கன்னியம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சுரைக்காயினை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அறுவடை செய்யப்படும் சுரைக்காயை விற்பனைக்கு உசிலம்பட்டி காய்கறி சந்தைக்கு எடுத்து சென்றால் அங்கு 1கிலோ 2ரூபாய் முதல் 3 ரூபாய் வரை விற்பனையாகுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் கொரோனா முழு ஊரடங்கு கால கட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு வேலைக்கு கூலி ஆட்களை வைத்து அறுவடை செய்து, வாகனங்கள் கிடைக்காத பட்சத்திலும் அதிக வாடகை கட்டணம் செலுத்தி சுரைக்காயை விற்பனைக்கு கொண்டு சென்றால் சுரைக்காய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் வேறு வழியின்றி அறுவடைசெய்துள்ள சுரைக்காய்கனை கீழே கொட்டி ஆடு, மாடுகளுக்கு தீவனமாக வழங்கி வருகின்றனர்

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com