Home செய்திகள் உசிலம்பட்டி அருகே காற்றுடன் மழை பெய்ததில் சாலையோரம் இருந்த 200 ஆண்டு பழமையான இச்சி மரம் சாய்ந்து சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

உசிலம்பட்டி அருகே காற்றுடன் மழை பெய்ததில் சாலையோரம் இருந்த 200 ஆண்டு பழமையான இச்சி மரம் சாய்ந்து சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் மழை பெய்தது,இதில் உசிலம்பட்டியிலிருந்து எழுமலை செல்லும் வழியில் உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் சாலையோரம் இருந்த 200 ஆண்டு பழமையான இச்சி மரம் வேரோடு சாய்ந்து சாலை மற்றும் அருகில் இருந்த கடை, வீடுகள் மீது விழுந்தது.இதனால் சாலையோரம் இருந்த கடை, வீடுகள் மற்றும் மின்கம்பங்களும் உடைந்து சேதமடைந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.சம்பவமறிந்து அருகிலிருந்த இராஜக்காபட்டி ஊராட்சி மன்றத்தலைவா் சித்ரா பால்ராஜ் மற்றும் 58 கிராம இளைஞா்கள் குழுவைச் சோ்ந்த சௌந்திரபாண்டியன் ஆகியோா் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்து விட்டு மரத்தை அப்புறுப்படுத்தும் பணியில் இறங்கினா்.தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் இணைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் போராடி மரத்தை அப்புறப்படுத்தினர்.சாலையோரம் இருந்த பழமையான மரம் சாய்ததால் உசிலம்பட்டி எழுமலை சாலையில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com