சீமானூத்து கிராமத்தில் 15 வருடங்களுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுர்த்து கிராமத்தில் சீனிவாச பெருமாள் சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டி கொரோனாவிற்கு விதிக்கப்பட்ட அரசு விதிமுறைகளின் படி நடைபெற்றது. ஜல்லிக்கட்டுப்போட்டி காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் 800 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். மொத்தம் 13 சுற்றுகள் நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு சுற்றுக்கும் 50 மாடு பிடி வீரர்கள், 70காளைகள் களமிறக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் காளைகளுடன் மல்லுக்கட்டி காளைகளை அடக்கினர்.

ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு முன்பு உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் ராஜ்குமார் தலைமையில் மாடு பிடி வீரர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு மிக்சி, கிரைண்டர், குக்கர், பீரோ, எல்இடி டிவி, பீரொ, கட்டில், பித்தளை பாத்திரங்கள், சில்வர் பாத்திரங்கள், தங்க காசு, வெள்ளி காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் 21 காளைகளை அடக்கிய சிவனேசன் என்பவருக்கு முதல் பரிசாக புல்லட் இருசக்கர வாகனமும், இரண்டாவது பரிசுக்காக 16 காளைகளை அடக்கிய விஜய் என்பவருக்கு இருசக்கர வாகனமும்,12 காளைகளை அடக்கிய சந்துரு என்பவர் மூன்றாவது பரிசாக இருசக்கர வாகனத்திற்காக தேர்வாகியுள்ளனர்.மேலும் சிறந்த காளைகளாக 3 காளைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 15 வருடங்களுக்குப் பிறகு இந்த கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி தலைமையில் ஏழு ஊர் கிராம மக்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர்.

உசிலை சிந்தனியா