
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளர் கல்வி கழகத்திற்கு நிர்வாகத்தின் கீழ் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக ரவி பதவி வகித்து வருகிறார்.இம்மாத ஆரம்பத்தில் கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர்களுக்கு கருத்தரங்கு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த கருத்தரங்கு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அந்தந்த பாடப்பிரிவு ஆசியரியர்கள் செய்கின்றனர்.
ஆனால் கருத்தரங்கு கூட்டத்திற்காக கல்லூhயிpல் பணிபுரியும் பேராசிரியர்களிடம் ரூ.5000 பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கல்லூhயில் பணிபுரியும் சுயநிதி பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அரசின் கீழ் பணிபுரியும் பேராசிரியர்களிடம் மாதம் ரூ2000 பணம் வசூலிப்பதாகவும் பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கல்லூhயில் புதியதாக பாடப்பிரிவுகள் தொடங்க இருப்பதாக கூறி பேராசிரியர்களிடம் ரூ25000 பணம் கேட்டு கல்லூரி முதல்வர் ரவி தொல்லை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து பலமுறை கல்லூரி பேராசிரியர்கள் நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 25க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள மூக்கையாத்தேவர் நினைவு மண்டபத்தில் கல்லூரி முதல்வரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.