
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வாலாந்தூர், செல்லம்பட்டி, முண்டுவேலம்பட்டி, குப்பணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெல் பயிரிட்டு விவசாயம் செய்துள்ளனர். பருவமழை மாற்றம் காரணமாக நெல் பயிர்கள் மழையால் நனைந்து சேதமாகியிருந்த நிலையில் அதிலிருந்து பாதி நெல் பயிர்களை விவசாயிகள் காப்பாற்றியுள்ளனர். தற்போது நெல் பயிர்கள் அனைத்தும் விளைச்சல்அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அறுவடைக்கு தயாராக உள்ள நெல் கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். நெல் கதிர்களை அறுவடை செய்ய வேலையாட்களும் கிடைக்கவில்லை, இயந்திரமும் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் இயந்திரம் கிடைக்கும் பட்சத்தில் 1மணி நேரத்திற்கு 4000ஆயிரம் முதல் 5000ருபாய் வரை அறுவடை வாடகை செலவாக கேட்பதால், நெல் பயிருக்கு செலவழித்த பணம்கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அறுவடை செய்யும் இயந்திரங்களை அதிகாரிகள் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
You must be logged in to post a comment.