ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை,உசிலம்பட்டி எம்.எல்.ஏ பா.நீதிபதி துவக்கிவைத்தார் .

உசிலம்பட்டி டிசம்- 28.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கல்லூத்து, உத்தப்பநாயக்கனூர், நடுப்பட்டி, மேக்கிலார்பட்டிஉள்ளீட்ட ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளான நாடக மேடை, பயணிகள் நிழற்குடை தார்சாலை,,மேல்நிலை குடிநீர் தொட்டி  ,குளியல் தொட்டி பேவர் பிளாக் உள்ளிட்ட  திட்ட பணிகளுக்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.           உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி பணிகளுக்குஉசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி எம் எல் ஏ தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா,மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், ஆவின் நிர்வாக குழு சுப்பிரமணி, அம்மா பேரவை இணைச் செயலாளர் செல்வராஜ் ,எம் ஓ.ஆர் போஸ்  ,மொக்கப் பாண்டி ,சி .என். அண்ணாதுரை, போத்தம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் உக்கிரபாண்டி, கல்லூத்து ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மலைச்சாமி வடுகபட்டி தனிக்கொடி ,அம்மாபேரவை துணைச் செயலாளர் சுரேஷ்குமார், உத்தப்பநாயக்கனூர் ஒன்றிய கவுன்சிலர் பாண்டிலட்சுமி ,செல்லம்பட்டி முன்னாள் துணை சேர்மன் பெருமாள் , ஏட்டாள் பழனி .செல்லம்பட்டி இளைஞரணி ரகு ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வினோத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

உசிலை சிந்தனியா