கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பலி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குன்னூத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜகோபால் மகள் ரித்யா(12). இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள தோட்டத்தில் சக சிறுவர்களுடன் சிறுமி குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். தோட்டத்திற்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாதது குறித்து பெற்றோர்கள் தேடியபோது கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. உடனே உசிலம்பட்டி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணப்புதுறை நிலைய அதிகாரி தங்கம் தலைமையிலான தீயணைப்புவீரர்கள் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியியை சடலமாக மீட்டனர். அதனைதொடர்ந்து உசிலம்பட்டி போலீசார் பிரேத பரிசோதணைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா