Home செய்திகள் ராஜக்காப்பட்டி 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கோட்டாட்சியர் ராஜ்குமார் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

ராஜக்காப்பட்டி 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கோட்டாட்சியர் ராஜ்குமார் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காபட்டி கிராமத்தை அடர்வன காடுகளாக மாற்று முயற்சியாக அந்த பகுதியைச் சேர்ந்த அமமுக ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபால்ராஜ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோர்கள் ஈடுபட்டுள்ளனர். தங்களது சொந்த செலவில் 300க்கும் மேற்பட்ட வேம்பு, புளியமரம், அரசமரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு சோலைவனமாக மாற்றும் முயற்சியாக மரக்கன்றுள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து பணிகளை தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சாலையோரங்கள், ஊரணி பகுதிகள், கால்வாய் கரைபகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்இளைஞர்கள் சௌந்திரபாண்டியன் தலைமையிலான இளைஞர்கள் பல்வேறு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com