உசிலம்பட்டி அருகே செம்பட்டி கிராம அங்கன்வாடி மையத்தில் மதுரை ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பல்வேறு பகுதியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் துறை ரீதியாக ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் செம்பட்டி கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த ஊரணியை கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் மீட்டு அதனை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டார். மேலும் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதையும், சுத்தம் செய்யாமல் இருப்பதையும் கண்டு சரிசெய்யாத அங்கன்வாடி பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதனைதொடர்ந்து வடுகப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிராவிட காலணி பகுதியில் ஆய்வுமேற்கொண்டார். அந்தபகுதியில் சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டார். காலணி பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வினய் பொதுமக்களிடம் உறுதியளித்தார். இதில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

உசிலை சிந்தனியா