
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் கிராமத்திற்கு அருகில் உள்ளது 58 கிராம கால்வாய். இந்த கால்வாயில் கடந்த வருடம் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோது டி.புதூர் பகுதியில் உள்ள கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சென்றது. இந்நிலையில் இந்த வருடம் 58கிராம கால்வாயிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் கால்வாயை தமிழக அரசின் மூலம் ரூ75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் 58கால்வாய் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று பணிகள் சரிவர நடைபெறுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உதவிசெயற்பொறியாளர்கள் நீலாவதி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.