
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ளது 60ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய கண்மாய் உள்ளது.இன்று காலையில் கண்மாயில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்ததைப் பார்த்து அப்பகுதியில் நடைப்பயிற்ச்சியில் ஈடுபடுவோர் அதிர்ச்சி அடைந்தனர்.கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகள் கிடந்ததால் மருத்துவக் கழிவுகளால் கொரோனா பரவும் ஏற்ப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க உசிலம்பட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமணைகளில் அரசு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்துள்ளது. மருத்துவமணையில் சேரும் கொரோனா கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுவதற்கு அனுமதியில்லாத நிலையில் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக கண்மாயில் கொட்டிவிட்டு செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கண்மாயின் நிலவளம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உடனே சம்பந்தப்பட்;ட சுகாதாரத்துறையினர் கொரோனா மருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் கொட்டும் மருத்துவமணை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.