
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சந்தைப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 80 வயதுள்ள முதியவர் தங்களது உறவினரின் வீட்டுக்காக மதுரைக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமணையில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதை சுகாதாரதுறையினர் உறுதிபடுத்தியுள்ளனர். இந்நிலையில் அவர் வசித்து வந்த வீட்டை சுகாதாரத்துறையிpனர் தார்பாய் கொண்டு அடைத்துள்ளனர். ஆனால் இந்த கிராமத்தில் இதுவரை கிரிமிநாசினி மருந்து தெளிக்கபடவல்லை எனவும், கிராமத்தில் உள்ளவர்களுக்கு எந்த பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட சுகாதாரதுறை அதிகாரிகள் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உசிலம்பட்டிப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படாத நிலையில் மீண்டும் தொற்று ஏற்ப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.