உசிலம்பட்டி கண்மாய் கரைபகுதியில் உள்ள மரக்கன்றுகளை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள உசிலம்பட்டி கண்மாயைச் சுற்றிலும் உள்ள கரைப் பகுதியில் கடந்த வருடம் நடிகர் சௌந்தரராஜனின் பிறந்த நாளை முன்னிட்டு பணைவிதைகள் மற்றும் வேம்பு உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன் அந்த மரக்கன்றுகளுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வாகனம் மூலம் தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளை பாதுகாத்து வந்தனர்.ஆனால் காலப்போக்கில் நகராட்சி நிர்வாகம் இந்த பணிகளை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது

.இந்நிலையில் உசிலம்பட்டி பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மிதமான மழை பெய்து வருவதால் கண்மாய் கரை பகுதிகளில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் பணை விதைகள் துளிர்விடத்தொடங்கியுள்ளது. ஆனால் பராமரிப்பு இல்லாததால் தேவர்சிலை அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் துளிர்விட்ட மரக்கன்றுகளுக்கு வேலி அமைத்து பராமரிப்பு செய்தனர். இதனால் ஆட்டோஓட்டுநர்களுக்கு பொதுமக்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்தனர்

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..