கோட்டாச்சியர் முயற்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும்படையால் உசிலம்பட்டியில் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகம் பரவி வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .இதற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியைப் பின்பற்றுவதே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வழியாகும்.இதை அறியாத மக்கள் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் வருவதால் கொரோனா அதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நகராட்சி காவல்துறை தாசில்தார் துறைகள் சார்பில் தனித்தனியாக அபராதம் விதிக்கப்பட்டதால் எல்லைப்பிரச்சனை ஏற்ப்பட்டது.இதனைத் தவிர்க்க தமிழகத்திலேயே முதன்முறையாக காவல்துறை- வருவாயத்துறை மற்றும் நகராட்சி அலுவலகத்திலிருந்து சிலரை தேர்ந்தெடுத்து பறக்கும்படை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.இவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நின்று கண்காணித்து முகக்கவசம் அணியாதவர்கள் மீது ரூ200 அபராதம் விதித்து வருகின்றனர்.தினமும் தொடர்ச்சியாக அபராதம் விதிக்கப்பட்டு வருவதால் தற்போது முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தினமும் அபராதம் விதிக்கப்படுவதால் வேறு வழியில்லாமல் முகக்கவசம் அணிவதாக பொதுமக்களும் வணிகர்களும் தெரிவித்தனர்.இதனால் தற்போது உசிலம்பட்டிப் பகுதியில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அரசு ஓரே இயந்திரமாக செயல்பட்டு பணியாற்றினால் எதனையும் சாதிக்கலாம் என்பதற்கு இச்சம்பவே உதாரணமாகும்.இதே போல் தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்களை பிடிக்க (திருத்த) பறக்கும் படை அமைக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் விருப்பமாகும்.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..