
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது..இதனால் தமிழகத்தில் சென்னை மதுரை ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரொனா வைரஸின் தாக்கம் பொதுமக்கள் மட்டுமல்லாது மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என அனைவருக்கும் பரவியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதிகளில் இதுவரை 75 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 6 காவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால் உசிலம்பட்டி காவலர் குடியிறுப்பை சுகாதாரத் துறையினர் தகராத்தால் அடைத்து சீல் வைத்து தனிமைப்படுத்தியுள்ளனர். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் கோவிட் கேர் சென்டர் துவங்கப்பட்டவுடன் இவர்கள் அங்கே மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.