Home செய்திகள் உசிலம்பட்டி, செல்லம்பட்டியில் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

உசிலம்பட்டி, செல்லம்பட்டியில் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

by mohan

செல்லம்பட்டி

மதுரைமாவட்டநஞ்சைபுஞ்சைவிவசாயிகள்சங்கம் மற்றும் மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி சார்பில் கடந்த 30 ஆண்டுகளாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க பட்டு வந்தது. ஆனால் இன்றைய பா ஜ க அரசு தனியார் மயமாக்கல் காரணமாக புதிய மின் கொள்கை சீரமைப்பு சட்டத்தின் படி ரத்து செய்ய முடிவெடுத்து விட்டதை கண்டித்து செல்லம்பட்டியில பொன்மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த பட்டது.

செக்கானூரணி காவல் துறை அதிகாரிகள் கைது செய்து காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள்.மேலும்.கொரனோவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் உதவிகளை உடனடியாக உசிலம்பட்டி வட்டார பகுதிகளில் வழங்கிடு….விவசாயிகளுக்கு மிக அபாயகரமான வெட்டுக்கிளி தாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திடு..என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசின் தமிழக விவசாயிகள் இலவச மின்சாரம் ரத்து செய்ததை கண்டித்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

வட்டாரத் தலைவர் வெஸ்டன் முருகன்,நகரத் தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி, சரவணக்குமார் விஜயகாந்தன், ஒன்றிய கவுன்சிலர் ரம்யாரெங்கமலை நர்ச தங்கமணி மற்றும் 15 காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப் இன்ஸ்பெக்டர் சிவபாலன் ஆகியோர் கைது செய்தனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!