Home செய்திகள் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் காட்டு தீ; அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்?…

கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் காட்டு தீ; அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்?…

by mohan

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சொக்கம்பட்டி அருகே முந்தல் அருவிக்கு மேல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட சொக்கம்பட்டி பீட் பகுதியில் அடிக்கடி காட்டு தீ எரிவது, யானைகளின் மர்ம மரணம் மற்றும் விலை உயர்ந்த ஈட்டி தேங்கு மரங்கள் திருட்டு என பல் வேறு சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. மாடு மேய்க்க செல்லும் நபர்கள் சில நேரங்களில் பீடி பற்ற வைத்து விட்டு அணைக்காமல் போடும் தீக்குச்சி மற்றும் பீடித் துணடுகளால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வேட்டை தடுப்பு காவலர்களுக்கு உரிய உபகரணங்கள் இல்லாததும், மால் வழித்தடம் சரியாக தெரியாததாலும் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.அடிக்கடி ஏற்படும் தீ விபத்தினால் ஈட்டி சந்தனம்,தேக்கு, போன்ற விலை உயர்ந்த மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியதாக பதிவேடுகள் சொன்னாலும், கோரைப் புற்கள் மற்றும் சிறு செடி கொடிகள் மட்டும் தான் எரிந்ததாகவும் மற்ற விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாகவும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.அரிய வகை உயிரினங்களும் தீ விபத்தில் சிக்கியிருக்கலாம் என்பதால் வனத்துறை உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி உரிய துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!