Home செய்திகள் உசிலம்பட்டியில் தன்னார்வ இளைஞர், மற்றும் காவல்துறையினர் இனைந்து பொதுமக்களுக்கு உதவி.

உசிலம்பட்டியில் தன்னார்வ இளைஞர், மற்றும் காவல்துறையினர் இனைந்து பொதுமக்களுக்கு உதவி.

by mohan

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன, மேலும் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் பொது மக்களை பாதிக்காமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கவும் உத்தரவிட்டுள்ளது, இந்நிலையில் அன்றாட கூலிவேலை செய்து தங்கள் பிழைப்பை நடத்தி வரும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்கள் அன்றாட சாப்பாடு இருக்கும் திண்டாடி வந்தனர்,

இதனை அறிந்த தமிழக அரசு . தமிழக அரசின் சார்பிலும்,பல அரசியல் கட்சியினர், மற்றும் தன்னார்வலர்கள் சார்பிலும் பொது மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர், இந்நிலையில் மதுரை ஐயர் பங்களா வில் வசிப்பவர் சரவணகுமார் அவர் பொது மக்களின் கஷ்டங்களை அறிந்து அவர்களின் நண்பர்களான நாதன், கௌதம், கார்த்திக் ஆகியோர் இணைந்து மதுரை, சிலைமான், ஆகிய பகுதிகளில் சென்று ஏழை எளிய பொதுமக்களை அடையாளம் கண்டு அந்தந்த ஊர் காவல் துறையினர் உதவியுடன் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு உதவி செய்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு வந்து காவல்துறை அதிகாரி டிஏஸ்பி ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் எஸ்ஐ சிவபாலன் முன்னிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கிராமிய கலைஞர்கள்,சலவைத் தொழிலாளர்கள், மற்றும் ஏழை எளிய பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தன்னார்வ இளைஞர் சரவணகுமார் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு தேவையான ஒரு மாதத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!