உசிலம்பட்டி கண்மாய் சீரமைப்பு பணியில் 58 கிராம இளைஞர் குழுவினர் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த வருடம் இந்த கண்மாயை சீரமைத்து ஆழப்படுத்தும் பணியில் 58 கிராம இளைஞர் குழுவினர் ஈடுபட்டனர், இந்நிலையில் தற்போது சீமைக்கருவேல மரங்கள் மீண்டும் வளர்ந்து உள்ளதாக தகவல் கிடைத்தது.இதனையடுத்து 58 கிராம இளைஞர் குழுவினர் செளந்திர பாண்டியன் தலைமையில் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள சிறுசிறு கருவேல மரங்களை வேரோடு பிடுங்கி உப்புக் கரைசல் தண்ணீரை அதில் ஊற்றி அம்மரங்கள் அளிக்கப்பட்டது , இவர்களுடன் சமூக ஆர்வலர் ராஜக்காபட்டி பால்ராஜ் மற்றும் அக்னி சிறகுகள் அறக்கட்டளை இளைஞர்கள் இணைந்து சீரமைப்பு இப்பணியில் ஈடுபட்டனர்.

உசிலை சிந்தனியா