உசிலம்பட்டி அருகே சின்னபாலார்பட்டியில் மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் 2அடி நீளமுள்ள சந்துக்குள் சடலத்தை எடுத்துசெல்லும் அவலம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டடி ஊராட்சிட்குட்பட்டது சின்னபாலார்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் இறந்தவர்களின் சடலத்தை எடுத்து சென்று 2கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொதுமயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர். ஆனால் கிராமத்தில் சடலத்தை எடுத்து செல்லும் பாதைகள் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கிராமத்தில் சுமார் 2அடி நீளமுள்ள பாதையில் சடலத்தை எடுத்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இறுதி சடங்குகள் செய்யமுடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் சடலத்தை தலையில் சுமந்துகொண்டு கிராமத்தை விட்டு வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனத்தில் சடலத்தை வைத்து மயானத்திற்கு எடுத்து செல்கின்றனர். இதே நிலைமை கடந்த 20 வருடங்களாக நீடித்து வருவதாகவும், இதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்புக்களை அகற்றி பாதை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலைசிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..